Online Tamil Classes - Learn Tamil,Tamil Tutors Online,learn to speak Tamil online class,தமிழ் வகுப்பு
LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 

வலைத்தமிழ் இணையத் தமிழ்ப்பள்ளி (ValaiTamil Online Tamil Academy)

 

அறிமுகம்


இன்றைய உலகமயமாக்கல் சூழலில் தமிழ் மக்கள் உலகம் முழுதும் இடம்பெயர்ந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி தமிழ்நாட்டை விட்டு வெளி மாநிலங்களில், வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும், தமிழை ஆய்வுக்காகவோ, ஆர்வத்தின்பேரிலோ கற்றுக்கொள்ள விரும்பும் வெளிநாட்டுக்காரர்களுக்கு எளிதில் மொழியை பேச, எழுத, படிக்க சொல்லிக்கொடுக்கும் கட்டமைப்பாக வலைத்தமிழ் இணையத் தமிழ்ப்பள்ளி விளங்கும்.

வெளிநாட்டு வாழ் தமிழர்கள் அருகில் தமிழ்ப்பள்ளி இல்லாதவர்கள், தமிழ்ப்பள்ளி இருந்தும் நேரில் சென்று படிக்க இயலாதவர்கள், தமிழ்ப்பள்ளியின் வார இறுதி நேரம் போதவில்லை மேலும் தனி வகுப்பு தேவை என்று விரும்புபவர்கள், வயது காரணமாக பள்ளிகளில் படிக்க முடியாதவர்கள் என்று பலதரப்பட்ட தேவைகளுக்கு நம் இணையவழி தமிழ்ப்பள்ளி தீர்வை அளிக்கிறது.

இணையத் தமிழ்ப்பள்ளி முதல்வர்: திரு. ரா.ராஜராஜன்

  • கல்விப்பணியில் 30 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு பங்களிப்புகளை வழங்கிவருபவர்.
  • புலம்பெயர் மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை உருவாக்கிய அனுபவம் உள்ளவர்.
  • பிறநாட்டு மாணவர்களுக்கு தமிழை சொல்லிக்கொடுக்கும் அனுபவம் மிக்கவர்.
  • தமிழ் இலக்கணம், அறிவியல் தமிழ், திருக்குறள் மன்றம், கணக்கதிகாரம் உள்ளிட்டவை குறித்து தொடர்ந்து எழுதி வருபவர்.
  • பல நூல்களின் ஆசிரியர்

இணையத் தமிழ்ப்பள்ளி துணை-முதல்வர்: திருமதி. வசந்தி ராஜராஜன்

  • கல்விப்பணியில் 25 ஆண்டுகளுக்கு மேல் பல்வேறு பங்களிப்புகளை செய்தவர்.
  • பிறநாட்டு மாணவர்களுக்கு எளிமையாக தமிழை சொல்லிக்கொடுக்கும் அனுபவம் மிக்கவர்.
  • தமிழ் இலக்கணம், ஒப்பிலக்கியம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்தவர்.
  • தமிழறிஞர் முனைவர். சூ. இன்னாசி அவர்களின் மாணவி.

வகுப்பு நேரம்

  • மாணவர்கள் வசிக்கும் நாடுகளில் நேரத்திற்கு ஏற்ப வகுப்புகள் நடத்தப்படும்.

பாடத்திட்டம்

  • அமெரிக்காவின் California Tamil Academy (CTA) (உலகத் தமிழ்க்கல்விக் கழகம்) -ன் High School Credit Program (HSCP) பாடத்திட்டம் நடத்தப்படுகிறது.
  • மாணவர்களின் தேவைக்கு ஏற்ப பிற நாட்டுப் பாடத்திட்டங்கள்.
  • தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் தேர்வின் (TVA Exam) தரத்திற்கு உரிய பயிற்சி.

learn tamil online

 

Submit Your Details Below for learn tamil online:

 
Teacher name *
Your Name *
E-Mail *
Phone with Country Code *
Country *
State *
Propose of the learn Tamil *
  Disclaimer  
I read and agree the disclaimer Yes No
Write reCAPTCHA code *